சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கே.இ. ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “ஞானவேல்ராஜாவுடன் படம் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
Here's the Speech of The Master craftsman Dir. #PaRanjith at the Grand Audio Launch Event of #Thangalaan 💥
— Studio Green (@StudioGreen2) August 5, 2024
Director Speech ▶️ https://t.co/KKiNAnA44N
A @gvprakash Musical 🎶#ThangalaanAudioLaunch#ThangalaanFromAug15@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe #StudioGreen… pic.twitter.com/LyKE8B6tKh
தங்கலான் படத்தின் பட்ஜெட்டில் சிக்கல் இருந்தது. அப்போது ஞானவேல்ராஜா மிகவும் உதவியாக இருந்தார். அந்த நன்றியை வெற்றியாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தம்பியாக உங்களுக்கு வெற்றியை கொடுக்க ஆசைப்படுகிறேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
சினிமா வாழ்வின் ஒரு அங்கமாக ஆனது. அதனால் சினிமாவை சரியான முறையில் கையாள விரும்பினேன். திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்கள் தான் என்னை உருவாக்கியது. நான் படம் எடுத்தால் நமக்கான பிரச்சனைகளை எடுத்து சொல்லலாம் என்று தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். இங்கு சொல்லப்படாத கதைகள் உள்ளது. அதனை சினிமாவில் தான் கூற முடியும். சமூகத்தின் பிரதிபலிப்பாக அந்த படங்கள் இருந்தது. நாம் படம் எடுத்தால் நம் வலியை, பிரச்சனைகளை பேசலாம்.
வரலாற்றில் நான் யார் என்பதே பெரிய கேள்வியாக உள்ள நிலையில், பல பாகுபாடு, பிரிவினைகள் இருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகள் இல்லை. அந்த தேடலோடு தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா மக்களுடன் நெருக்கமாக இருக்கிறது. சொல்லவிடாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி வெளியே கூறுவது என்பதை தான் என் படம் மூலமாக நான் தேடுகிறேன். சினிமாவில் வந்து புரட்சி செய்துவிடலாம் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். எனக்கு இந்த பயத்தை எல்லாம் போக்கியது வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் தான். கிட்டத்தட்ட என் வாழ்கையும் அது தான்.
எளிதாக மக்களுடன் கனெக்ட் ஆக முடியும் என்பதை வெங்கட் பிரபுவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அட்டக்கத்தி படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு எடுத்த மெட்ராஸ் படம் பிடித்ததால் தான் நடிகர் ரஜினிகாந்த், கபாலி, காலா படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்தார். ரஜினிகாந்திற்கு நான் பேசும் அரசியல் பிடிக்கும். மற்ற கமர்சியல் நடிகர்களை பார்ப்பது போல் விக்ரமை பார்க்க முடியவில்லை. அவர் கலையை மிகவும் நேசிக்கக் கூடியவர். எனது படத்தில் விக்ரம் நடிப்பாரா நாம் சொல்வதை அவர் கேட்பாரா என்று சந்தேகம் இருந்தது.
பின்னர், விக்ரம் என் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரை கதாபாத்திரமாக மாற்றுவது மிகவும் சவாலானது. தங்கலான் கதை பல இடங்களில் பயணித்தது. ஒரு கலையை, ஒரு கலைஞரை கையாளும் விதத்தை விக்ரமிடம் இருந்து கற்றுக் கொண்டேன். விக்ரமை இந்த படத்தில் மிகவும் கொடுமைப்படுத்தினேன், மன்னித்துவிடுங்கள் என்றார். தங்கலானை இன்றும் தூக்கி சுமக்கிறார். என்னை மிகவும் நம்புகிறார். நிச்சயமாக அவருக்கு வெற்றியை கொடுப்பேன் என்று கூறியவர், பார்வதி நடித்தால் நன்றாகவே இருக்கும் என்று கேட்டதற்காக அவரும் நடித்து கொடுத்தார் என்றார்.
அவரை மிகவும் கஷ்டப்படுத்தி கொண்டே இருப்பேன். சாதாரண மனிதனாக இருந்தால் இந்த படத்தை பண்ண முடியாது, படம் சரியாக வர வேண்டும் என்று நான் மன உளைச்சலுக்கு சென்றுவிட்டேன். மக்கள் பார்த்து ரசிக்கும் வரை அந்த மனநிலையில் தான் இருப்பேன் என்று ஞானவேல்ராஜாவிடம் கூறியுள்ளேன். நான் படப்பிடிப்பில் மிகவும் மோசமாக நடந்து கொண்டேன். ஆனால் நீங்கள் மிகவும் ஆதரவாக இருந்தீர்கள்.
என்னை மன்னித்து விடுங்கள் என்றார். சினிமா என்பது என்டர்டெயின்மெண்ட் தாண்டி இந்த சமூகத்திற்கு நம்மால் என்ன கொடுக்க முடியும் என்பது தான். இந்த சமூகம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. என்னுடைய அரசியல் இல்லை என்றால் நான் இல்லை. அம்பேத்கரின் மாணவனாக தொடர்ந்து இயங்குவேன் என்பது உறுதி, என்னை விமர்சிக்கும் நண்பர்களுக்கும் நன்றி, நீங்கள் இல்லை என்றாலும் நானில்லை என்று கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் விஜய்யுடன் ஜோடி சேருகிறாரா பிரேமலு புகழ் மமிதா பைஜூ? - Mamitha baiju