ETV Bharat / entertainment

விஜயின் அரசியல் வருகை போற்றப்பட வேண்டிய ஒன்று: இயக்குநர் ஹரி - director hari

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 12:10 PM IST

Director Hari: மிகப்பெரிய நடிகராக இருக்கும் விஜய், மக்களுக்காக சேவை செய்யப் போவதாக சொல்வது போற்றப்பட வேண்டிய வார்த்தை என நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

Director Hari
இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி

திருச்சி: இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் டீசர் வெளியீட்டுக்காக, இயக்குநர் ஹரி திருச்சி மெயின்காட்கேட் பகுதியில் உள்ள எல்.ஏ திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார்.

இதையடுத்து, டீசர் வெளியிட்ட உடன் திரையரங்க மேடையில் அமர்ந்து ரசிகர்களோடு பட டீசரை கண்டு மகிழ்ந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தரமான படத்தை கொடுக்க‌ 20 வருடமானாலும் பரவாயில்லை. நாங்கள் பார்க்க தயாராக இருக்கிறோம் என்று ஆடியன்ஸ் தயாராகி விட்டார்கள். எனவே, நல்ல படங்களை கொடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்த படம் நானும், விஷாலும் இணைந்து பணியாற்றும் 3வது படம்.

படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகளையும் மிகவும் விறுவிறுப்பாக செய்துள்ளோம். முகம் சுழிப்பது போல் எதுவும் இருக்காது. எனவே, குடும்பத்துடன் இந்த படத்தைப் பார்க்கலாம். விஜய்யின் டேட்ஸ் (Dates) கிடைத்தால், அவரை வைத்து திரைப்படம் எடுத்துவிடுவேன். கதையெல்லாம் தயாராக தான் உள்ளது. அவரே சொல்லி இருக்கிறார், முதலில் மக்கள் சேவை செய்துவிட்டு, அடுத்தது சினிமாவுக்கு செல்கிறேன் என்று.

அரசியல் நல்லது தான். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு நடிகர், சேவை செய்யப் போவதாக சொல்வது போற்றப்பட வேண்டிய வார்த்தை. இதனை அரசியல்வாதிகளே பெரிய விஷயமாகக் கருதுகின்றனர். அவர் நல்லபடியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்‌. விஷால் அரசியலுக்கு வருவது குறித்து எனக்குத் தெளிவாக தெரியாது. அவர் அதை வேறு விதமாக சொல்லியுள்ளார்.

ரத்தினம் படத்தில் 4 சண்டை பயிற்சியாளர்களைக் கொண்டு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் உள்ளது. இந்த மாஸ்டரை வைத்து குறிப்பிட்ட சண்டைக் காட்சிகளை செய்தால் நன்றாக இருக்கும் என்பது ஒரு காரணம். மற்றொன்று, ஒரே செட்யூலில் (schedule) அனைத்து காட்சிகளையும் முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், ஒவ்வொருவராக பயன்படுத்திக் கொண்டோம்.

சிங்கம் திரைப்படத்தை மூன்றாவது பாகத்துடன் நிறுத்தியதற்கு காரணம், மூன்று என்பது நல்ல ரவுண்டாக இருந்தது. எனவே, அப்படியே நிறுத்திக் கொண்டேன். ஆனால், இன்னொரு போலீஸ் படம் விரைவில் எடுக்க உள்ளேன். ஹிந்தியிலும், தெலுங்கிலும் என்னை படத்திற்காக அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கேயே நிறைய தயாரிப்பாளர்களும், நடிகர்களும் வாய்ப்பு வழங்குகிறார்கள்

எனவே, இதற்கே நேரம் சரியாக உள்ளது. பலர் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சூழல் ஏற்பட்டால், அதற்கான நேரம் கிடைத்தால் ஹிந்தி, தெலுங்கு, கன்னடத்திலும் இயக்குவேன். துரைசிங்கத்தை சிங்கம் என சுருக்கி படத்திற்கு பெயர் வைத்தோம். அதன் பின்னர், பரணியை தாமிரபரணி என பெரிதாக்கி பெயர் வைத்தோம்.

இப்போது, ரத்னம் என்ற ஹீரோவின் பெயரையே படத்தின் பெயராக வைத்துவிட்டோம். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு இன்டைரக்டாக பெயர் வைத்த நிலையில், இதற்கு நேரடியாக பெயர் வைத்ததற்கு காரணம், விஷாலின் தற்போதைய வளர்ச்சியே. படத்தில் கெட்ட வார்த்தைகள் வருகிறது என்றால், அது கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே. ஒரு இடத்தில் தகராறு ஏற்பட்டால் எல்லா வார்த்தைகளும் வந்துவிடும்.

சும்மா இருக்கும்போது யாரும் கெட்டவார்த்தை பேசுவதில்லை. மேலும், எல்லாவற்றையும் அப்படியே நாங்கள் ஆடியன்ஸிடம் (Audience) கொடுப்பதில்லை. அதற்குரிய தேவை இருந்தால் மட்டுமே சென்சாரில் அனுமதிக்கின்றனர். இல்லையென்றால் அனுமதிப்பதில்லை. அடுத்த படத்தினுடைய டிஸ்கஷன் 26ஆம் தேதி இரவு தான் ஆரம்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கோதாவிலும் இறங்கத் தயார்..! விஜய் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்' - நடிகர் விஷால்! - Actor Vishal

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.