ETV Bharat / entertainment

ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release flims

Re Release: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவதால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு இல்லை எனவும், சிறிய பட்ஜெட் படங்களின் கதை நன்றாக இருந்தால் ரசிகர்களின் கவனம் திரும்பும் எனவும் இயக்குநரும், சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் ஈடிவி பாரத் வாயிலாக கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 5:50 PM IST

கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் இல்லை. அப்படியே, சில நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலும், அவைகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை. சில சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனாலும், படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

மாறாக, ஓடிடியில் ரிலீஸ் ஆகும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர். இதனால் கஷ்டப்பட்டு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு போஸ்டர் செலவு கூட திரும்பிக் கிடைப்பதில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.

இப்படி தமிழ் சினிமா கடந்த நான்கு மாதங்களாக மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையில், மலையாளப் படங்கள் தமிழ்நாட்டில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெறுகிறது. அந்த வரிசையில், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆவேசம் என அடுத்தடுத்து மலையாளப் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இது போதாது என்று, தற்போது ரீ ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. ஏற்கனவே வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், விண்ணைத்தாண்டி வருவாயா, 3, மயக்கம் என்ன, வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.

தற்போது விஜய் நடித்த கில்லி படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலைக் குவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மே 1ஆம் தேதி அஜித் நடித்த பில்லா படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படும் படங்களைக் காண இளம் தலைமுறையினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கில் காட்சிகள் கிடைக்காததால், படங்கள் பாதிக்கப்படுகின்றன என தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாலும், பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாலும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு இருக்காது, சிறிய பட்ஜெட் படங்களின் கதை நன்றாக இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்கிற்கு வருவர் என்கிறார் இயக்குநரும், சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்.

இதுகுறித்து, அவர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பிரத்யேக பேட்டியில், “ரீ ரிலீஸ் படங்கள் என்பது இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரிய பெரிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களைக் கொண்டாட்ட மனநிலைக்கு அழைத்து வருவது தான்.

ரீ ரிலீஸ் என்பது ஹாலிவுட்டிலும் நடக்கின்ற ஒன்றுதான். மீடியா இதனைப் பெரிய விஷயமாகப் பேசுவதால், இளைஞர்களும் அதனைப் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் சினிமாவில் வேட்டையாடு விளையாடு திரைப்படம் தான் முதலில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு பெரிதாக வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு ரஜினியின் அண்ணாமலை, முத்து, பாபா படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. தமிழ் சினிமாவில் சிறிய தேக்க நிலை இருந்ததால் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. மக்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்க ரீ ரிலீஸ் படங்கள் ஒரு காரணமாக அமைந்தன. திரையரங்கு உரிமையாளர்களும் இதனை மிகச் சிறப்பாக நடத்தினர். தனுஷின் 3 திரைப்படம் வெளியானபோது வந்த வசூலை விட, ரீ ரிலீஸ் செய்த வசூல் அதிகமாக வந்தது.

மக்கள் நல்ல தரமான பொழுதுபோக்கு படங்களைப் பார்க்க நினைக்கின்றனர். அது தற்போது தவறி வருகிறது. ரீ ரிலீஸ் படங்கள் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ளது. ஆந்திராவிலும் தற்போது படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்து வருகிறது. இதனை சரி செய்ய திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கொடுக்கப்படுவதில்லை என்பது தவறு. இந்த வாரம் எங்களது ஒரு நொடி என்ற படத்தை தமிழ்நாட்டில் 150 திரைகளில் வெளியிட்டோம். ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் வருகிறது. கில்லி படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள், ஒரு நொடி படத்தைப் பார்க்கின்றனர். இது நல்ல விஷயம் தானே. தியேட்டருக்கே வராதவர்கள் தற்போது வந்துள்ளனர், இது நல்ல விஷயம்.

புதுப்படங்கள் நல்ல படமாக இருந்தால் தானாகவே கவனம் திரும்பும். ரீ ரிலீஸ் படங்களால் மக்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருகின்றனர். இது நல்ல விஷயம். சிறிய படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வழக்கமான படங்களை எடுக்கக் கூடாது. பொழுதுபோக்கு படமாக இருந்தாலும், அதிலும் தனித்தன்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் பார்ப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்கி 2898 ஏடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - KALKI 2898 AD Releases On June 27

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.