சென்னை: இன்று (டிச.12) ரஜினிகாந்த் தனது 74வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு தங்களது சமூக வலைதள பக்கம் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “happy birthday one, only one superstar my thalaiva” என பதிவிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோல் இசையமைப்பாளர் இமான் ’அண்ணாத்த’ படத்திற்கு பின்னணி இசையமைத்த போது எடுத்த BTS வீடியோவை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை வேதிகா வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “கடவுளின் அற்புதமான படைப்பான ரஜினிகாந்த் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சூப்பர்ஸ்டார் மற்றவரகளையும் சூப்பர்ஸ்டாராக உணர வைப்பார். உங்களின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என கூறியுள்ளார்.
Happy birthday my dear Thalaiva ❤️🙏#HBDSuperstarRajinikanth@rajinikanth pic.twitter.com/5egT1dNM8T
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 12, 2024
இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “பெருமதிப்புமிக்க இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். நடிகர் மம்மூட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் தளபதி படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெருமதிப்புமிக்க இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️💐 pic.twitter.com/Wkq0uozuXe
— Mari Selvaraj (@mari_selvaraj) December 12, 2024
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்: விஜய், கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து!
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படையப்பா படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ், நடிகை வரலட்சுமி சரத்குமார், தெலுங்கு நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் டக்குபத்தி, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று மாலை 6 மணிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' படத்தின் அப்டேட் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Happy birthday to the one, only one, super one .. SUPERSTAR .. the phenomenon that redefined mass and style .. my thalaiva 🙏🙏🙏 @rajinikanth sir ❤️❤️
— Dhanush (@dhanushkraja) December 12, 2024