ETV Bharat / entertainment

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறவுள்ள 'ராயன்' திரைக்கதை... குஷியில் ரசிகர்கள்! - Raayan in oscars library

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 2, 2024, 3:04 PM IST

Raayan in oscars library: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளது.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறவுள்ள ராயன் திரைக்கதை
ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறவுள்ள ராயன் திரைக்கதை (Credits - Sun Pictures X page, ETV Bharat)

சென்னை: பிரபல நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'ராயன்'. இப்படம் கடந்த ஜூலை 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனது பெற்றோரை இழக்கும் தனுஷ், அதற்கு பின் தனது தங்கை, தம்பிகளை வளர்ப்பதும், அதன் பின் சென்னையில் உள்ள ரவுடி கும்பலால் அவரது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கிறார் என்பது ராயன் கதையின் கருவாகும்.

இந்நிலையில், ராயன் திரைப்படம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. ராயன் படத்தில் தனுஷ், துஷாரா விஜயன் ஆகியோரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. அது மட்டுமின்றி, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையும் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ராயன் திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of motion pictures, arts and science) என்ற குழு வழங்கி வருகிறது. இதன் நூலகம் 1910இல் தொடங்கப்பட்ட நிலையில், இந்தியாவைச் சேர்ந்த தேவதாஸ், லகான், சக் தே இந்தியா உள்ளிட்ட பல படங்களின் திரைக்கதைகள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழில் கடந்த வருடம் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, தற்போது ராயன் படத்தின் திரைக்கதை இடம் பெற்றுள்ளது. தனுஷ் இயக்கி, நடித்த அவரது 50வது படமான 'ராயன்' ஆஸ்கர் நூலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; தயாரிப்பாளர்களுக்கு பறந்த கடிதம்! - Tamilnadu film producers council

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.