ETV Bharat / entertainment

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நடித்துள்ள அரிசி படப்பிடிப்பு நிறைவு! - Mutharasan Arisi Movie

CPI Mutharasan Arisi Movie: இசைஞானி இளையராஜா இசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் “அரிசி” திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

CPI Mutharasan Arisi Movie
CPI Mutharasan Arisi Movie
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 2:51 PM IST

Updated : Mar 14, 2024, 3:19 PM IST

சென்னை: இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் 'அரிசி'. இன்றைய சமூகத்தில் உணவின் பின்னாலான அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் முடித்த படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளைத் துவக்கியுள்ளது.

கதை களம் என்ன? : இப்படம் குறித்து படக்குழு கூறுகையில், நம் உணவான அரிசியின் பின்னால் இருக்கும் அரசியலை, விவாசாயத்தின் உண்மைகளை பேசும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகிறது. மேற்கத்திய உணவை முன்மொழியும் கார்பரேட், நம் பாரம்பரியத்தை, நாம் அறியாமலே அழித்து வருகிறது என தெரிவித்துள்ளது.

நம் சமூகத்தின் மிக முக்கியமான இந்த பிரச்சனையை ஒரு அழுத்தமான திரைக்கதையுடன், ஆழமான படைப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ விஜயகுமார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி முதன்முறையாக திரையில் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இக்கால சூழலுக்கு ஏற்ப நடிகர் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, விவசாயத்திற்கு பெயர் போன தஞ்சாவூர், கும்பகோணம், குடவாசல், திருவையாறு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, சிசர் மனோகர், ரஷ்ய மாயன், பிக்பாஸ் தாமரை,கோவி இளங்கோ, மகிமை ராஜ், பெரம்பலூர் மணி சேகரன், ரமேஷ் மற்றும் மாஸ்டர் ஹரி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் குரோசோவா எடிட்டிங் செய்கிறார். டிசைன்ஸ் அஞ்சலை முருகன்,மோனிகா புரொடஷன்ஸ் சார்பில் பி. சண்முகம் தயாரிக்க, எஸ்.எம் பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்கள்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு: இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கி, பரபரப்பாக நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்… ஹீரோயினாக பிரபல நடிகை ஒப்பந்தம்!

Last Updated : Mar 14, 2024, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.