ETV Bharat / entertainment

குக் வித் கோமாளி புகழ் நடிப்பில், நிஜப் புலியை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மே 03ஆம் வெளியீடு! - actor pugazh mr zoo keeper - ACTOR PUGAZH MR ZOO KEEPER

Actor Pugazh Mr.Zoo keeper: ஜே.சுரேஷ் இயக்கத்தில் நடிகர் புகழ் கதாநாயகனாக நடித்துள்ள மிஸ்டர் ஜூ கீப்பர் வரும் மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

குக் வித் கோமாளி புகழ் கதாநாயகனாக நடித்துள்ள படம் மே 3இல் வெளியீடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:44 PM IST

Updated : Apr 1, 2024, 10:59 PM IST

சென்னை: சின்னதிரையில் குக் வித் கோமாளி உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து அதன்மூலம் திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் புகழ். தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிப் பெறும் வெற்றி பெற்ற அயோத்தி படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக் நடித்த 1947 என்ற படத்தில் வாய் பேச முடியாதவர் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது. தற்போது கதையின் நாயகனாக மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr.zoo keeper) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கியுள்ளார். ஜே. சுரேஷ் இவர் வேலை, என்னவளே, ஜூனியர் சீனியர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படம் ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே மாதம் 3ஆம் தேதி மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படம் திரைப்படங்களில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளைக் கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் இந்த கோடை விடுமுறைக்குக் குழந்தைகள் கொண்டாடும் படமாக மிஸ்டர் ஜூ கீப்பர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "கமல்ஹாசன் பணம் சம்பாதிக்கத் தான் பிக்பாஸ் சென்றார்" - ராபர்ட் மாஸ்டர் பேச்சால் பரபரப்பு! - Kamal Haasan Bigg Boss

Last Updated : Apr 1, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.