ஐதராபாத்: பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று புதன்கிழமை (செப்.11) காலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பை, பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அனில் அரோரா இன்று காலை 9 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
Maharashtra | Father of actress-model Malaika Arora died by suicide by jumping off a terrace. Police team is present at the spot: Mumbai Police
— ANI (@ANI) September 11, 2024
என்ன காரணத்திற்காக அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டார் என தெரியவராத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் அனில் அரோராவின் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புனேவில் உள்ள மலைக்கா அரோரா தந்தை உயிரிழந்த அதிர்ச்சி தகவலை அறிந்து தற்போது மும்பைக்கு விரைந்து உள்ளார். அனில் அரோராவின் சடலம் மும்பை பாபா மருத்துவமனையில் உள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அனில் அரோராவின் மறைவு செய்தியை கேட்ட மலைக்கா அரோராவின் முன்னாள் கணவர் அர்பஸ் கான் உடனடியாக வீட்டிற்கு விரைந்துள்ளார். அனில் அரோரா உயிரிழந்தது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் விரைவில் அவரது மரணத்திற்கான காரனம் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த மலைக்கா அரோரா:
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் தான் இந்த மலைக்கா அரோரா. தனது 11 வயதில் பெற்றோர் இருவரும் விவாகாரத்து பெற்றுக் கொண்டதை அடுத்து மும்பையின் செம்பூர் பகுதிக்கு தனது தாய் மற்றும் சகோதரி அம்ரிதா அரோரா ஆகியோருடன் புலம் பெயர்ந்த மலைக்கா அரோரா, பாலிவுட் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடிக்கத் தொடங்கினார்.
தபாங், கப்பர் சிங், ஹவுஸ்புல் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களில் மலைக்கா அரோரா நடித்துள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா, பிரீத்தி ஜிந்தா ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான உயிரே படத்தின் தைய தையா பாடலில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் நடிகரும் சினிமா தயாரிப்பாளருமான அர்பஸ் கானை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மலைக்கா அரோரா. இருப்பினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இருவரும் விவாகாரத்து செய்து கொண்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டு தனித் தனியே வாழத் தொடங்கினர்.
இதையும் படிங்க: ஐபிஎலில் இருந்து தோனி ஓய்வு? ட்விட் மூலம் உறுதிப்படுத்திய சென்னை! - MS Dhoni Retirement Announced