சென்னை: தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 2005 முதல் பிரபல நடிகர்களுக்கு ஜோடியாகவும், பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தும் பெயர் பெற்றவர், அனுஷ்கா ஷெட்டி. மங்களூருவில் பிறந்த அனுஷ்கா, 2005இல் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிய சூப்பர் படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்து அறிமுகமானார்.
பின்னர் அடுத்தடுத்து விக்ரமார்குடு, அருந்ததி, வேதம் ஆகிய படங்கள் வெற்றி பெற்றது. கடைசியாக அனுஷ்கா நடித்து மிஸ் பொலிஷெட்டி திரைப்படம், கடந்த 2023இல் வெளியானது. இந்நிலையில், அனுஷ்கா அடுத்ததாக மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளார். ஜெயசூர்யா மற்றும் வினித் ஆகியோர் நடிக்கும் கத்தனார் என்ற படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
இது குறித்து, இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகர் ரோஜன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “கத்தனார் என்ற படத்தில் அனுஷ்கா உடன் நடிப்பதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார். கத்தனார் (kathanar - the wild sorcerer) என்ற படத்தை ராமானந்த் இயக்கவுள்ளார்.
இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகவுள்ளது. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்துவ பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதையாகும். கல்லியன் கட்டு நீலி என்ற கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. கத்தனார் படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Tenet-க்கு கிடைக்காத ஆஸ்கர் Oppenheimer-க்கு கிடைத்தது எப்படி? 3 முறை நோலனை புறந்தள்ளிய ஆஸ்கர்!