ETV Bharat / entertainment

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு களைகட்டும் தியேட்டர்கள்... இந்த வார கோலிவுட் புதுவரவு என்ன? - This week tamil releases - THIS WEEK TAMIL RELEASES

Kollywood movie releases: அஞ்சாமை, வெப்பன், ஹரா என இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் கோலிவுட் படங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

theatre Image
திரையரங்கம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 2:54 PM IST

சென்னை: கோலிவுட்டில் ஒரு ரீ ரிலீஸ் திரைப்படம் உட்பட ஏழு தமிழ் திரைப்படங்கள் நாளை திரைக்கு வருகிறது. கமல்ஹாசனின் இந்தியன், விதார்த், வாணி போஜன் நடிப்பில் அஞ்சாமை, வசந்த் ரவி, சத்யராஜ் நடிப்பில் வெப்பன், மோகன் நடிப்பில் ஹரா, தண்டுபாளையம், இனி ஒரு காதல் செய்வோம், நிஷா உள்ளிட்ட படங்கள் நாளை வெளியாகிறது.

அஞ்சாமை: அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில், விதார்த், வாணிபோஜன், ரகுமான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சாமை. ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எந்தவொரு படமும் நீட் தேர்வை மையப்படுத்தி வெளியாகவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து அடுக்கடுக்கான கேள்விகளை தொடுக்கும் படமாக அஞ்சாமை உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான அஞ்சாமை டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

வெப்பன்: சவாரி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ், ராஜூவ் மேனன், தான்யா ஹோப் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் வெப்பன். மேலும், இதில் ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்சன் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வெப்பன் திரைப்படத்தில் AI தொழில்நுட்பம் மூலமாக இளம் வயது சத்யராஜைக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், எதிர்பார்ப்புகளோடு நாளை இப்படம் திரைக்கு வருகிறது.

ஹரா: 80, 90களில் சில்வர் ஜூப்ளி நாயகன் என்ற பட்டத்தோடு வெற்றி நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஹரா. விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள இந்த படத்தில் மோகனுடன் இணைந்து அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்கும் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள ஹராவும் நாளை திரைக்கு வருகிறது.

இந்தியன்: ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் இந்தியன். இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோரும் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 வருகிற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் முதல் பாகமான இந்தியன் படம் நாளை ரீ- ரிலீஸ் ஆகிறது. மேலும், சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள தண்டுபாளையம், இனி ஒரு காதல் செய்வோம், நிஷா உள்ளிட்ட படங்கள் நாளை வெளியாகிறது.

இதையும் படிங்க: பி.டி.சார் படம் மீது ரேஷன் கடை ஊழியர்கள் புகார்.. வருத்தம் தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி! - Hiphop Tamizha Adhi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.