ETV Bharat / entertainment

அவர் பாதையில்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்! - Vidaamuyarchi Fist Look

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 7:29 PM IST

Vidaamuyarchi Fist Look: அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Vidaamuyarchi Fist Look
விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் (Credits - Suresh Chandra 'X' Page)

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்கள் உருவாகி வருகின்றன. இதில் குட் பேட் அக்லி அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், விடாமுயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு பல மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருவதால், அஜித் குமார் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானின் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக ஒரு படத்தை முடித்துவிட்டு தான் அஜித் குமார் தனது அடுத்த படத்தை தொடங்குவார். ஆனால், இம்முறை விடாமுயற்சி தாமதமாவதால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் அப்டேட் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என்று அஜித்தின் மேலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன்படி, தற்போது விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அஜர்பைஜான் சாலையில் கையில் பையுடன் ஸ்டைலாக அஜித் நடந்து வருகிறார். மேலும் ‘அவர் பாதையில்’ என்று கீழே எழுதப்பட்டுள்ளது. மேலும், படத்தில் த்ரிஷா நடிப்பதை உறுதிபடுத்தி உள்ளனர். அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக் வெளியாகி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.

இதையும் படிங்க: "ராகுகாலம், எமகண்டம் என படத்திற்கு தலைப்பு வைப்பேன்" - விஜய் ஆண்டனி கலகல பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.