சென்னை: நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள 63வது படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தில் அஜித், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
அஜித்குமார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில், இன்னும் சில நாட்களில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறவுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. மார்க் ஆண்டனி படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: முதல்முறையாக மலையாள சினிமாவில் அறிமுகமாகும் அனுஷ்கா!