ETV Bharat / entertainment

காந்தாரி; முதன்முறையாக இரட்டை வேடத்தில் களமிறங்கும் ஹன்சிகா! - ஹன்சிகா மோத்வானி

Actress Hansika Motwani: இயக்குநர் கண்ணன் தயாரிப்பில் உருவாகி ஏப்ரம் மாதம் வெளிவரவுள்ள காந்தாரி திரப்படத்தில் நடிகை ஹன்சிகா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

காந்தாரி திரைப்படம்
நடிகை ஹன்சிகா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 12:52 PM IST

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நடிகர்களுடன் வேலாயுதம், சிங்கம் 2, மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, பிரியாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவரது 50வது திரைப்படம் ‘மஹா’ சமீபத்தில் வெளியானது.

காந்தாரி: 2010ஆம் ஆண்டு 'சேட்டை' படத்திற்கு பிறகு இயக்குநர் ஆர்.கண்ணனுடன் மீண்டும் நடிகை ஹன்சிகா இணைகிறார். மசாலா பிக்ஸ் (Masala Pix) நிறுவனம் சார்பில், இயக்குநர் கண்ணண் தயாரிப்பில், நடிகை ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு “காந்தாரி” என்று பெயர் சூட்டப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

இயக்குநர் கண்ணன்: இயக்குநர் கண்ணன் ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "தி கிரேட் இந்தியன் கிச்சன்" திரைப்படம், பல்வேறு விமர்சனங்கள் மத்தியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில், தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, எமோஷ்னல் மற்றும் ஹாரர் காமெடி கலந்த த்ரில்லர் படமாக “காந்தாரி” திரைப்படமாக வரும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன், வினோதினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை கையாண்டுள்ளார். இப்படத்திற்கு எல்வி முத்து கணேஷ் இசையமைத்துள்ளார். எம்.ஏ.தொல்காப்பியனின் கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் திரைக்கதை எழுதியுள்ளார்.

இரட்டை வேடம்: நடிகை ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவப்பெண் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக, இவர் சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்டப் பணிகள்: இப்படத்திற்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ரூ.60 லட்சம் மதிப்பில் பிரமாண்டமான மலைக்குகை அமைத்து, 1943ஆம் ஆண்டுகளில் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளை படமாக்கியுள்ளது, படக்குழு. படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 'காந்தாரி' படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: "வணங்கான் படப்பிடிப்பில் இயக்குநர் பாலா என்னை அடித்தார்" - பிரேமலு நடிகை பகீர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.