ETV Bharat / entertainment

சினிமா நிகழ்ச்சிகளில் எடிட்டர்களுக்கு முன்னுரிமை. .. நடிகை தேவயானி வேண்டுகோள்! - Actress devayani about film editors

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 4:10 PM IST

Actress devayani about film editors: படத்தொகுப்பாளருக்கு எந்தவிதமான பெரிய அங்கீகாரமும் கிடைப்பதில்லை எனவும், வருங்காலங்களில் சினிமா நிகழ்ச்சிகளில் படத்தொகுப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் நடிகை தேவயானி கூறியுள்ளார்.

நடிகை தேவயானி புகைப்படம்
நடிகை தேவயானி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் சார்பில்(SIFEA) சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார், நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "என்னைப் போன்று படம் எடுப்பவர்களுக்கு எடிட்டிங் அறை என்று ஒன்று இல்லை என்றால் படம் வெளியாகாது.என்னுடைய முதல் படத்திலிருந்து என்னுடைய எடிட்டர்கள் தான் படத்தை உருவாக்குகிறார்கள்" எனக் கூறினார்.

இதனைதொடர்ந்து பேசிய ஆர்.கே.செல்வமணி, "சங்கங்களில் நிர்வாகியாக வருவது ஆபத்தானது போன்ற சூழ்நிலை உள்ளது. சங்கங்கள் அதிகாரம் செலுத்துவதற்கான அமைப்பாக இருந்தது. இப்போது திரைப்படத் துறையில் உள்ள சங்கங்கள் சுயஒழுக்கத்தோடு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் எடிட்டிங் ரூம் என்பது ஒரு குடும்பம் போன்ற இருந்தது. அதில் இயக்குநர், கேமராமேன் அனைவரும் இருப்பார்கள்" என்றார்.

பின்னர் பேசிய நடிகை தேவயானி, "ஒரு சிறந்த இயக்குநர் ஒரு சிறந்த படத்தொகுப்பாளராக இருக்க வேண்டும் அல்லது ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் இயக்குநராக படத்தை காப்பாற்ற வேண்டும். ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் இல்லையென்றால் ஒரு சிறந்த படம் வராது. ஒரு இயக்குநரின் இதயத்துடிப்பு படத்தொகுப்பாளர் தான். நோயாளிகளுக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவருக்கு தெரிவது போல், ரசிகர்களுக்கு ஒரு காட்சியின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது ஒரு படத்தொகுப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.

பாரதிராஜா ஒரு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர். இந்நிலையில் புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும் இயக்குநர்களும் தான். ஆனால் படத்தொகுப்பாளருக்கு எந்த விதமான பெரிய அங்கீகாரமும் கிடைப்பதில்லை. மேலும் சினிமா நிகழ்ச்சியிலும் படத்தொகுப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. வருங்காலங்களில் படத்தொகுப்பாளருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று தேவயானி வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: வசூல் மழையில் கல்கி 2898 ஏடி ...மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - KALKI 2898 AD BOX OFFICE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.