ETV Bharat / entertainment

"சொல்லி கொடுத்தால் எல்லாம் மாறும்..'வாகை சூட வா'வுக்கு அப்பறம்".. - 'சார்' ட்ரெய்லர் வெளியானது! - sir trailer out now - SIR TRAILER OUT NOW

விஜய்சேதுபதி நடிகராவதற்கு முன்பே எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர் என சார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசியிருக்கிறார் நடிகர் விமல். மேலும், இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி உள்ளது.

நடிகர் விமல்
நடிகர் விமல் (Credits - lokesh kanagaraj X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 4:31 PM IST

சென்னை : போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள 'சார்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.‌ இந்த விழாவில் விமல் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் விமல் பேசும்போது, "படத்தின் கதை கேட்டு ரொம்ப பிடித்து விட்டது. வேகமாக எடுத்தாலும் தரமான படமாக இயக்குநர் எடுத்துள்ளார். வாகை சூட வா படத்திற்கு பிறகு கல்வி சார்ந்த படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். சார் படத்துக்கு வெற்றிமாறன் தான் சார்.

வெற்றிமாறன் பெயர் போட்டதால்தான் சார் படம் வெளியில் தெரிகிறது. சத்தமாக உற்சாகமாக பேசு என்று எனது ஆரம்ப காலத்தில் இருந்து என்னை ஊக்கப்படுத்துபவர் நடிகர் விஜய் சேதுபதி அவருக்கு நன்றி. விஜய் சேதுபதி மற்றும் வெற்றிமாறன் எல்லாம் ஒருவருக்கு கை கொடுத்து தூக்கிவிடும் நபர்கள்.

இதையும் படிங்க : பான் இந்தியா அளவில் வெளியாகும் சத்யராஜ் - ப்ரியா பவானி சங்கரின் ‘ஜீப்ரா’ - Zebra Movie Release

நானும் கை கொடுக்கலாம் என்று சிலருக்கு கை கொடுத்தேன். ஆனால் காலைபிடித்து வாரிவிட்டனர். அதனால் யாருக்கு கை கொடுக்க வேண்டும் என்று பார்த்து கொடுங்கள். நான் நடித்துக்கொண்டு இருந்தேன். என் காலை வாரியதால் கீழே விழுந்த சமயத்தில் மீண்டும் என்னை அரவணைத்து தூக்கி விட்டதில் விஜய் சேதுபதிக்கு பெரும் பங்கு உண்டு.

என்னிடம் போனில் பேசும்போது உற்சாகமாக பேசுவார். என்னையும் அப்படி பேச சொல்வார். நான் சோர்ந்து போகும் போது எல்லாம் அவருக்கு போன் செய்து சார்ஜ் ஏற்றிக்கொள்வேன். அவர் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இன்று வரை கை கொடுத்துக்கொண்டே இருக்கிறார் நன்றி.

நடிகர் நட்டி உடன் இணைந்து படம் நடிக்க ஆசை. மகாராஜா படத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். மகாராஜா படத்தில் நட்டி கதாபாத்திரத்தை முதலில் பிடிக்காது. கிளைமாக்ஸில் ஹீரோவாகிவிட்டார். நான் ஒரு கதாநாயகனாக இங்கு நிற்க முக்கிய காரணம் விஜய் சேதுபதி. நான் பசங்க படத்தில் நாயகனாக ஆவதற்கு விஜய் சேதுபதி தான் காரணம். அந்த வாய்ப்பு வாங்கி தந்தவர் அவர் தான். அவர் நடிகர் ஆவதற்கு முன்பே எனக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தந்தவர் விஜய் சேதுபதி" என தெரிவித்தார்.

மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், நடிகர் ஆர்யா ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 'மானமும் அறிவும் தான் மனிதனுக்கு அழகு' என்ற டயலாக் உடன் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.