சென்னை: மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்த திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’. இப்படம் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியானது. கல்கி எழுதிய வரலாற்றுக் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால், பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை பெறும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இன்று 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் 4 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் தேசிய விருது வென்றுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்யா கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம், தேசிய விருது வென்ற படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Blessed that PS1 is crowned with national recognition propelled with the love of the audience. Tamil history, literature, culture & cinema marching triumphantly together from the past to the present!! Congratulations Mani Sir, @LycaProductions , @arrahman & @dop_ravivarman… pic.twitter.com/ce9rRnZlER
— Vikram (@chiyaan) August 16, 2024
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், “பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்கள் அன்பினால் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு மற்றும் சினிமா ஆகியவை இன்று வரை இணைந்துள்ளது. இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், ரவிவர்மன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 15) வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "சந்தோஷத்தில் அழுதுவிட்டேன்" - தேசிய விருது வென்ற திருச்சிற்றம்பலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பிரத்யேக பேட்டி! - 70th National film awards