ETV Bharat / entertainment

ரசிகர்களை பின்பற்றி இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா.. குவியும் பாராட்டுகள்! - Actor Surya Blood Donation - ACTOR SURYA BLOOD DONATION

Actor Surya Blood Donation: நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) அவர் இரத்த தானம் செய்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு பிறந்தநாளின்போது, ஒவ்வொரு ஆண்டும் தான் இரத்த தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா
இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 8:12 PM IST

சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூரியா ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தான முகாம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும் இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டும் விதமாக நடிகர் சூர்யா, அவர்களுக்கு வீடியோ கால் மூலம் பாராட்டுகளை தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயல் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் அவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்வதாக ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "நான் முதல் காதல் அல்ல.." - வரலட்சுமி சரத்குமாரின் காதல் கணவர் பரபரப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.