சென்னை: இயக்குநர் எஸ்.எம்.பாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ராபர்'. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் ஆகியவற்றை மெட்ரோ திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை இம்ப்ரஸ் ஃப்லிம்ஸ் சார்பில் கவிதா.எஸ், மெட்ரோ நிறுவனம் சார்பில் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்தப் படம், சென்னையில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார்.
படத்தின் நாயகனாக சத்யா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 'மெட்ரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் NB, கலை இயக்குநர் பி.சரவணன், சண்டைப் பயிற்சி சி.மகேஷ், நடனம் ஹரி கிரண் ஆகியோர் பணிபுரிகின்றனர். இந்தத் திரைப்படம் மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கவின் - யுவன் - இளன் கூட்டணியில் உருவான ‘ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு! - Star Movie Trailer Release