ETV Bharat / entertainment

கல்வி மட்டுமே மனிதனை மதிக்க சொல்லிக்கொடுக்கும்.. அப்பா தொடங்கியதை அகரம் கையில் எடுத்துள்ளது: நடிகர் கார்த்தி - agaram foundation

agaram foundation: தமிழ்நாட்டில் கல்விக்காக யாரும் உதவி செய்ய மறுப்பதில்லை எனவும், சக மனிதர்களை மதிக்க கல்வி மட்டுமே கற்றுக்கொடுப்பதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 11:03 AM IST

சென்னை: பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளித்து ஊக்கபடுத்தும் ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறகட்டளை 45-வது ஆண்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 மாணவ மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு தலா ரூ.10,000 ஊக்கதொகை வழங்கப்பட்டது. இதில் பார்வை மாற்றுத் திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்து வந்து மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, "பெரிய அளவில் காசுக்கு ஆசைப்படாதவராக அப்பா இருந்துள்ளார். அப்பா, தொடங்கியதை 25 ஆண்டுகளுக்குப் பிறகு 'அகரம்' கையில் எடுத்தது. முன்பு முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விருது வழங்கினோம். பிறகு அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்பதையும் முக்கியமாகப் பார்க்கிறோம்.

மாணவர்களை நகரத்தில் வந்து படிக்க வைப்பதை நோக்கமாக வைத்திருக்கிறது அகரம். சிறிய கிராமத்தில் படிப்பவர்களுக்கு பெரிய அளவில் அறிமுகம் இருக்காது. என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், உங்களை எதாலும் நிறுத்த முடியாது. சாதாரண மாணவனாக இருப்பது கடினமானது. அவனை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அது ரொம்ப கொடுமை என்றவர் கல்வி பெரிய ஆயுதமாக உள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கல்வி குறித்தான தகவல்களை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதை பாப்புலர் ஆக்க வேண்டும். மணிப்பூர் மாணவி சொன்னதை நம்மால் உணர முடியுமா?. நாம் தமிழ்நாட்டில் உள்ளதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை. படிப்பதற்கு உதவி என்று கேட்டால், தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். சக மனிதனை மதிக்க கற்றுக் கொடுப்பதுதான் கல்வி என்று என்னுடைய மகள் கூறினார்" என்று பேசினார்.

இதையும் படிங்க: 'கல்வியும் ஒழுக்கமும் தான் இமயத்தில் ஏற்றும்' - மாணவர்களுக்கு நடிகர் சிவக்குமார் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.