ETV Bharat / entertainment

"கனத்த இதயத்துடன் எடுத்த முடிவு".. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமல்ஹாசன்...அடுத்த தொகுப்பாளர் யார்? - Kamal Haasan - KAMAL HAASAN

Kamal Haasan: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'பிக்பாஸ் சீசன் 8' இல் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்த கமலின் அறிக்கை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்த கமலின் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu, @ikamalhaasan X page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 6, 2024, 5:21 PM IST

சென்னை: இந்திய அளவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஹிந்தி மொழியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழியிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பம் முதலே தமிழில் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் தக் லைஃப், கல்கி 2ஆம் பாகம், இந்தியன் 3 என பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக இன்று கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'கனத்த இதயத்துடன், நான் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய பயணத்தில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன். பல திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால், என்னால் இந்த வருடம் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை. எனக்கு உங்கள் வீடுகளிலிருந்து தரும் அன்பிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்திய அளவில் சிறந்த ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக விளங்குகிறது.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து எனது கற்றலை பகிர்ந்துள்ளேன். மேலும் உங்களிடமிருந்து பலவற்றை கற்றுள்ளேன். இதுவரை தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக விஜய் டிவி குழு, மற்றும் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற உழைத்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் பிக்பாஸ் சீசன் கண்டிப்பாக வெற்றி பெறும்” என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 இல் இருந்து கமல்ஹாசன் விலகியதை அடுத்து இந்த சீசனை தொகுத்து வழங்கப் போகும் நட்சத்திரம் யார் என்பதில் பார்வையாளர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏற்கெனவே தமிழில் 'பிக்பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மேடையில் நடிகர் விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா.ரஞ்சித்.. தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? - Director pa ranjith

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.