ETV Bharat / entertainment

பி.டி.சார் படம் மீது ரேஷன் கடை ஊழியர்கள் புகார்.. வருத்தம் தெரிவித்த ஹிப்ஹாப் ஆதி! - Hiphop Tamizha Adhi

PT SIR: இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளியான பிடி சார் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரேஷன் கடை ஊழியரிடம் நடிகர் ஆதி மன்னிப்பு கேட்டார்.

பிடி சார் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
பிடி சார் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 10:10 PM IST

சென்னை: இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, இளவரசு, பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் பி.டி.சார். இப்படத்தின் வெற்றிக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர்கள் ஹிப்ஹாப் ஆதி, பாக்யராஜ், இளவரசு, இயக்குநர் கார்த்திக் வேணுகோபால், இளவரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில், நடிகர் இளவரசு பேசும்போது, "வேணுகோபாலுக்கு நான்தான் நன்றி சொல்ல வேண்டும். ஒருசில படங்கள் கதை கேட்கும்போது நமக்குள் ஆவி புகுந்த மாதிரி இருக்கும். ஒரு காலகட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கு வரையறை இருந்தது. ஹிப்ஹாப் ஆதிக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது, "இந்த படத்தில் நான் முதலில் நாயகன் ஆதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.‌ நல்ல இயக்குநரை கொண்டுவர நினைத்தார், அதற்கு நன்றி. பெண்கள் மீது ஆண்களுக்கு ஒருவித ஈர்ப்பு உண்டு என்று நினைக்கிறேன். இளவரசு இப்படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்" என்றார்.

பின்னர், நடிகர் ஆதி பேசும் போது, "ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் தற்போது வரை ஹவுஸ் ஃபுல் ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பேசும்போது இன்னும் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள். எல்லா விமர்சனங்களையும் படித்தேன், பார்த்தேன்.‌ உங்களது பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை எடுத்துக் கொண்டு இன்னும் என்னை மெருகேற்றி நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்துகொண்டே இருப்பேன்.

ஒரு ஊரில் மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு இப்படத்தை இரண்டு காட்சிகள் போட்டார்கள் என்ற செய்தியை தயாரிப்பாளருக்கு காட்டினேன், பத்து மடங்கு மகிழ்ச்சியடைந்தார். இந்த படம் லாபம் பெற்றதை விடவும், சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியது என்ற செய்தி தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த படத்தில் இயக்குநர் பாக்யராஜின் பங்கு முக்கியமானது" என்று பேசினார்.

பின்னர், செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர். படத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் குறித்து தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி ரேஷன் கடை ஊழியர்கள் புகார் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஆதி, "படத்தில் கதிர்வேல் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் அதுபோன்ற நபர்கள் இருந்தனர்.

யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை. அந்த எண்ணம் இயக்குநருக்கும் இல்லை. அப்படி யாருக்காவது மனவேதனை அளித்திருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படம் ஒரு கல்வித் தந்தையை மையப்படுத்தியது, எங்கள் தயாரிப்பாளரே ஒரு கல்வியாளர் தான்” என்றார்.

பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கேள்விக்கு, ”நூற்றில் 80 சதவீதம் பேர் இதுகுறித்து வெளியில் சொல்வதில்லை என்ற செய்தியைப் பத்திரிகையில் படித்தேன். நம்மைச் சுற்றி நல்ல சமூகத்தைக் கொண்டு வந்தால் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறையும். பொதுவாகவே, தமிழ் சமூகம் அறிவார்ந்த சமூகம். இது மனநிலை சார்ந்த பிரச்னையாகவே நான் பார்க்கிறேன். சமூகத்தின் மீது சற்று அதிக அக்கறை வேண்டும் என்பது முக்கியம்” என்றார்.

நீங்களே ஒரு கல்வியாளர் இந்த கதையை எப்படி ஓகே சொன்னீர்கள் என்று ஐசரி கணேஷிடம் கேட்டபோது, :இந்த கருத்து நல்ல கருத்து. இதனை நாம் சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தான் நான் நினைத்தேன். இந்த கருத்து மக்களுக்கும், எல்லா பெண்களுக்கும் போய் சேர வேண்டும்‌ என்பதே எனது ஆசை. அது நிறைவேறியதில் எனக்கு சந்தோஷம்” என்று தெரிவித்தார். முன்னதாக, படக்குழுவினர் படத்தின் வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடினர்.

இதையும் படிங்க: "எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வெப்பன் படம் வாய்ப்பாக இருந்தது" - வசந்த் ரவி பேச்சு! - Weapon Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.