ETV Bharat / entertainment

156 படங்களில், 24 ஆயிரம் நடன அசைவுகள்; கின்னஸ் சாதனை படைத்தார் நடிகர் சிரஞ்சீவி! - Actor chiranjeevi guinness records - ACTOR CHIRANJEEVI GUINNESS RECORDS

Actor Chiranjeevi Guinness World Records: நடிகர் சிரஞ்சீவி இதுவரை தான் நடித்த 156 படங்களில் 24,000 நடன அசைவுகள் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி
கின்னஸ் சாதனை படைத்த நடிகர் சிரஞ்சீவி (Credits - @upasanakonidela X account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 11:25 AM IST

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் 'மெகா ஸ்டார்' என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். தனது 45 வருட திரையுலக வாழ்வில் 156 படங்களில், 537 பாடல்களுக்கு, 24,000 நடன அசைவுகள் செய்து உலக சாதனை படைத்துள்ளார். நடிகர் சிரஞ்சீவியின் நடன அசைவுகள் அவர் நடிக்க தொடங்கிய காலகட்டத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

1978ஆம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சிரஞ்சீவி, ருத்ரா வீணா, தாகூர், சுவயம் குருஷீ, ஸ்டாலின், கேங் லீடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசு சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. உலக சாதனை படைத்தது குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், "நான் கின்னஸ் உலக சாதனை படைப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இத்தனை வருட திரை வாழ்வில் நடனம் எனது வாழ்வில் ஒரு அங்கமாக மாறியது," என்றார்.

சிரஞ்சீவிக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அமீர் கான், "நடிகர் சிரஞ்சீவியை நான் எனது அண்ணனாக பார்க்கிறேன். சிரஞ்சீவி இந்த சாதனை படைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'லப்பர் பந்து' படத்தில் விஜயகாந்த் ரெஃபரன்ஸ் வர இதுதான் காரணமா? - இயக்குநர் விளக்கம்! - lubber pandhu team visit theatre

நடிகர் சிரஞ்சீவி உலக சாதனை படைத்ததற்கு பாராட்டு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "நடிகர் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனை படைத்து தெலுங்கு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்," எனக் கூறியுள்ளார். சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.