சென்னை: தவெக மாநாட்டில் விஜய், திராவிட மாடலுக்கு எதிராக பேசியது குறித்து நடிகர் போஸ் விமர்சித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்பத்தினார், அப்போது தவெக கட்சியின் கொள்கையை கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
இதனையடுத்து விஜய் ரசிகர்கள் தவெக மாநாட்டில் விஜய் என்ன பேசப் போகிறார் என ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடே உற்று நோக்கிய தவெக மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. அப்போது பேசுகையில், சிறுபான்மை, பெரும்பான்மை, மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்றார்.
யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. 😁😁😁
— Bose Venkat (@DirectorBose) October 27, 2024
மேலும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள் எதிரி, திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டம் தான் அரசியல் எதிரி, திராவிடத்தையும், தமிழ் தேசியமும் மண்ணின் இரு கண்கள் என கூறினார். விஜய்யின் பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகரும், திமுக ஆதரவாளருமான போஸ் வெங்கட் விஜய் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..” என பதிவிட்டுள்ளார். போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்த சார் திரைப்படம் சில நாட்களுக்கு முன் வெளியானது.
இதையும் படிங்க: கூத்தாடி என்பதா?... “உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்”... உதாரணம் சொன்ன விஜய்!
மேலும் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கங்குவா இசை வெளியீட்டு விழாவில் போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “வாழ்த்துக்கள் செல்லம் விஜய், உங்கள் அரசியல் பயணம் சிறக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்