சென்னை: நடிகர் அருண் விஜய் தனது ஆரம்பக் கால சினிமா வாழ்க்கையில் இலகுவான கதாபாத்திரங்களில் நடித்து வந்து. பின்னர் படிப்படியாக ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருக்கியவர். மேலும், தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் 'வணங்கான்' படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'மான் கராத்தே' படத்தின் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் அருண் விஜய். இப்படத்தை, பிடிஜி யுனிவர்ஸல் (BTG Universal) நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது.
பூஜையுடன் நடந்த இப்படத்தின் துவக்க விழாவில், படக்குழுவினருடன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி, கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.
முன்னதாக BTG Universal நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான "டிமாண்டி காலனி 2" மற்றும் இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் உருவாகியுள்ள "சென்னை சிட்டி கேங்ஸ்டர்" ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கங்குவா பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்? - தயாரிப்பாளர் தனஞ்செயன் விளக்கம்!
நடிகர் அருண் விஜயின் 36வது படமாக உருவாகும் இப்படத்தினை, சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன், பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளதாகப் படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.
அருண் விஜய்க்கு ஜோடியாகச் சித்தி இட்னானி நடிக்கவுள்ளார். மற்றும் அவர்களுடன் தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.
மேலும், டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்ய, பிரபல படத்தொகுப்பாளர் ஆண்டனி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவு மற்றும் பிரபு ஆகியோர் வடிவமைக்கவுள்ளனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அடடா மழைடா அட மழைடா" - ஏப்.11-ல் ரீ ரிலீசாகும் 'பையா' திரைப்படம்!