ETV Bharat / entertainment

"இன்றைய தேதிக்கு இவன் தான் சூப்பர்ஸ்டார்"..அருண் விஜயின் 'வணங்கான்' ட்ரெய்லர் வெளியானது! - Vanangaan trailer released - VANANGAAN TRAILER RELEASED

Vanangaan : இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் 'வணங்கான்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

அருண் விஜய் புகைப்படம்
அருண் விஜய் புகைப்படம் (Credits - ARUN VIJAY X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 8:21 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரோடக்சன்ஸ் நிறுவனமும் மற்றும் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடல் வரிகளை பாடலாசிரியர் வைரமுத்து எழுதி உள்ளார். சண்டைக் காட்சிகளை சிவா மேற்கொள்ள, எடிட்டிங் பணிகளை சுதர்சன் கையாண்டுள்ளார். சமீபத்தில், படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. ட்ரெய்லரில் பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் நொறுக்கி உள்ளார் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ட்ரெய்லரில் ’இன்றைய தேதிக்கு இவன் தான் சூப்பர்ஸ்டார்..’ போன்ற டயலாக் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வணங்கான் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. பின்னர், பல்வேறு காரணங்களால் இத்திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் கடைசியாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் 'யானை' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தோடு மோதும் 'டீன்ஸ்'... ரசிகர்களை கவர பார்த்திபன் செய்துள்ள புதுமை என்ன? - Parthiban teenz movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.