ETV Bharat / entertainment

விடாமுயற்சி அப்டேட் வந்தாச்சு.. தரமான இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு! - VIDAAMUYARCHI SECOND LOOK - VIDAAMUYARCHI SECOND LOOK

Vidaamuyarchi: இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் செகண்ட் லுக்கின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சி செகண்ட் லுக் போஸ்டர்கள்
விடாமுயற்சி செகண்ட் லுக் போஸ்டர்கள் (Credits - Lyca Production X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 8:13 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இதில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், செக்ண்ட் லுக்கில் இரு போஸ்டர்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், (EFFORTS NEVER FAILS) முயற்சி ஒருபோதும் வீண்போகாது என்று பொறிக்கப்பட்டுள்ள வரிகளுடன் மிரட்டலான லுக்கில் அஜித் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் நீண்ட நாட்களாக எடுக்கப்பட்டு வருவதால், அஜித்குமார் தனது அடுத்த படமான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. குட் பேட் அக்லி படமானது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியன் 4-ம் பாகம்? சித்தார்த் உடைத்த ரகசியம்! - Siddharth about Kamal Haasan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.