ETV Bharat / education-and-career

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பு இறுதி சுற்று சேர்க்கை ஒதுக்கீடு வெளியீடு

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான "ஸ்ட்ரே வேகன்சி" எனப்படும் இறுதிச்சுற்றுக் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

மருத்துவம் தொடர்பான கோப்புப் படம்
மருத்துவம் தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கு தற்பொழுது 4வது சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான ஸ்ட்ரே வேகன்ஸி எனப்படும் இறுதிச்சுற்றுக் கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.

அதில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.இதில் அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி பொறுத்தவரை எம்.பி.பி.எஸ் படிப்பில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் ஒரு காலியிடம், அரசுப் பல்மருத்துவக்கல்லூரிகளில் 23 இடங்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தனியார் BDS இடங்கள் 4 காலியாக உள்ளது.

MBBS சுயநிதி கல்லூரிகளில் 67 இடங்களும், தனியார் பல்கலைக்கழகங்களில் 61 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 134 இடங்களும் ஆக மொத்தம் 290 காலியிடங்கள் உள்ளன. 4 ஆவது சுற்று கலந்தாய்வு 25ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 145 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தனியார் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் 129 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்த மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் 5.11.2024-க்குள் கல்லூரியில் சேர வேண்டும்.

இதையும் படிங்க: MBBS, BDS ஸ்ட்ரே வேகன்ஸி கவுன்சிலிங் நடைமுறை என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அன்னை மருத்துவக் கல்லூரியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் 50 இடங்கள் உள்ளது. அதனை நிரப்புவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அனுமதிக்கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஸ்ட்ரே வேகன்ஸி சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ரூ.5 லட்சம் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். பிடிஎஸ் படிப்புகளுக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். கலந்தாய்வில் இடங்கள் தேர்வு செய்துவிட்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேராதவர்களுக்கு அந்தத் தொகை திருப்பி அளிக்கப்பட மாட்டாது. அதே வேளையில் ஒதுக்கீடு பெற்ற கல்லூரியில் சேருபவர்களுக்கு கல்வி கட்டணத்தில் அந்த தொகை கழித்து கொள்ளப்படும்.

கலந்தாய்வில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராமல் இருப்பதால் ஏற்படும் காலியிடங்களை தவிர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மாணவர்களுக்கு வைப்புத்தொகை, கல்விக் கட்டணம் திருப்பி தரப்படாது எனவும், இளநிலை நீட் தேர்வினை எழுதுவதற்கு ஒராண்டு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

MBBS, BDS படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு ஒதுக்கீட்டில் கலந்துக் கொண்டு இடங்களையும் பெறாதவர்கள் ஆன்லைனில் பங்கேற்கலாம். MBBS அல்லது BDS இடங்களிலும் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் மற்றும் இடங்களை தேர்வு செய்தும் சேராத மாணவர்கள் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.