ETV Bharat / bharat

ராம் பட பாணியில் தந்தையை கொன்று 2 நாட்கள் ரத்தக் கறையுடன் அருகில் இருந்த மகன்! என்ன நடந்தது? - UP Man Killed Father - UP MAN KILLED FATHER

உத்தர பிரதேசத்தில் தந்தையை கொன்று இரண்டு நாட்கள் அவரது சடலத்தின் அருகே ரத்தக் கறையுடன் அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Etv Bharat
Police question neighbours about the murder in Jhansi (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 6:02 PM IST

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த சானியா புரா பகுதியைச் சேர்ந்தவர் கோபால் தாஸ். மாற்றுத்திறனாளியான கோபால் தாஸ் தனது மனைவி மற்றும் 25 வயது மகன் அஷிஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட கோபால் தாசின் மனைவி தல்பேஹாட் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று வசித்து உள்ளார்.

இதனால் கோபால் தாஸ் மற்றும் அவரது மகன் அஷிஷ் ஆகியோர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோபால் தாசின் வீடு பூட்டியபடியே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இருவரது நடமாட்டத்தையும் காண முடியாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்டு உள்ளனர்.

அப்போது கோபால் தாஸ் சடலமாக துணியில் சுற்றப்பட்டு ரத்தம் சிதறிக் தரையில் கிடந்து உள்ளார். மேலும் கோபால் தாசின் சடலத்திற்கு அருகில் அஷிஷ் ரத்தக் கறையுடன் அமர்ந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ந்து போன கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து உடனடியாக விரைந்த வந்த போலீசார் கோபால் தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அஷிஷை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் அஷிஷ் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தனது தந்தையை கொன்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அஷிஷ் சுயநலத்தில் தான் இருக்கிறாரா அல்லது மனநலன் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்து தீர விசாரித்த பின் வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் பெற்ற தந்தையே மகன் போதை வெறியில் கொன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கார் பானட்டில் இழுத்துச் செல்லப்பட்டு பெண் கொலை! விபத்தில் சிவசேனா தலைவரின் மகனுக்கு தொடர்பா? - Shiv sena leader car accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.