பூனா (மகாராஷ்டிரா): பிரபல மென்பொருள் நிறுவனத்தின் பூனாவில் உள்ள கிளையில் பணிபுரிபவர் லக்னோவைச் வந்தனா திவேதி(வயது 26). இவர் லக்னோவைச் சேர்ந்த ரிஷப் நிகம் என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் நிகம், பூனாவில் இருந்த வந்தனா திவேதியை சந்திக்க, கடந்த ஜனவரி 27ஆம் தேதி பூனாவில் உள்ள ஹிஞ்சேவாடி (Hinjewadi) அடுத்த லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அரை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது, அவரை சந்திக்க வந்தனா திவேதி வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்த இளைஞர் வந்தனா திவேதியை, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று (ஜன.28) ஹோட்டலில் பணிபுரியும் நபர் வந்தனா திவேதியில் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின்னர், பிம்ப்ரி சின்ச்வாட் (Pimpri Chinchwad) காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் துணை காவல் கண்காணிப்பாளர் விஷால் ஹைர் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: புறப்பட்ட சிறிது தூரத்திலேயே கல்வி சுற்றுலா பேருந்து விபத்து.. ஈரோட்டில் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்!
அப்போது, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதற்கு, சம்பவத்தன்று மராத்தா இட ஒதுக்கீட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதை முன்னிட்டு அப்பகுதியில் பெரும் கொண்டாட்டமாக இருந்ததாகவும், அதனால் அவர்களுக்கு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவில்ல என்றும தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் பேசிய துணை காவல் கண்காணிப்பாளர் விஷால் ஹைர், கொலையின் நோக்கம் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ரிஷப் நிகம் நேற்று மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு, கொலை செய்த ஆயுதத்துடன் பிம்ப்ரி சின்ச்வாட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டார். பின்னர் ரிஷப் நிகமிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், ரிஷப் நிகம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை இன்று (ஜன.29) பூனா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனியார் நிறுவன பெண் ஊழியர் தனது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தருமபுரி லாரி ஓட்டுநர் மரணம்.. மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு விடுத்த கோரிக்கை!