மேற்கு வங்கம் : மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எதிர்வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிகபட்சம் 2 இடங்கள் மட்டுமே மக்களவை தேர்தலில் அக்கட்சி ஒதுக்க முடியும் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மும்முரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிர கட்டத்தை அடைந்து உள்ளன.
-
West Bengal CM Mamata Banerjee says "I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
— ANI (@ANI) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal CM Mamata Banerjee says "I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
— ANI (@ANI) January 24, 2024West Bengal CM Mamata Banerjee says "I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
— ANI (@ANI) January 24, 2024
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்றும் எதிர்வரும் மக்களவை தேர்தலை தனித்து எதிர்கொள்ள உள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தில் தனித்து போராடுவோம் என்று தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும், நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி தனக்கு கவலை இல்லை ஆனால் தங்கள் தரப்பு மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்கத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
இந்தியா கூட்டணியில் தொடர்ந்தாலும் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் மேற்கு வங்கம் வழியாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை செல்வது குறித்து யாரும் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் மம்தா கூறினார். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மம்தா பானர்ஜி விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்க மம்தா பானர்ஜி விரும்பிய நிலையில், அவர்கள் தரப்பில் இருந்து 10 முதல் 12 தொகுதிகள் கோரிக்கையாக வைக்கப்பட்டு உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த நிர்வாகி தெரிவித்து உள்ளார்.
-
VIDEO | “We will not contest the elections at the mercy of Mamata Banerjee. Congress knows how to contest elections on its own, and the two seats we have won (in 2019 Lok Sabha polls in West Bengal) were by defeating Mamata and BJP. Mamta is an opportunist; she herself came to… pic.twitter.com/LjWoVGgY35
— Press Trust of India (@PTI_News) January 23, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | “We will not contest the elections at the mercy of Mamata Banerjee. Congress knows how to contest elections on its own, and the two seats we have won (in 2019 Lok Sabha polls in West Bengal) were by defeating Mamata and BJP. Mamta is an opportunist; she herself came to… pic.twitter.com/LjWoVGgY35
— Press Trust of India (@PTI_News) January 23, 2024VIDEO | “We will not contest the elections at the mercy of Mamata Banerjee. Congress knows how to contest elections on its own, and the two seats we have won (in 2019 Lok Sabha polls in West Bengal) were by defeating Mamata and BJP. Mamta is an opportunist; she herself came to… pic.twitter.com/LjWoVGgY35
— Press Trust of India (@PTI_News) January 23, 2024
இதுகுறித்து பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு சந்தர்ப்பவாதி என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தயவில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் போட்டியிடாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : டெல்லியில் மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பா? என்ன நடந்தது?