ETV Bharat / bharat

குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்.. மேற்கு வங்கத்தில் பரபரப்பு! - voting machine was thrown

VOTING MACHINE: மேற்கு வங்கத்தில், தெற்கு பர்கானாஸிஸ் நடைபெற்ற வன்முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கால்வாயில் தூக்கிவீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.

குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
குளத்தில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் (Credit - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 12:03 PM IST

பர்கானாஸ்: நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட 22 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், 8 மாநிலங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளில் இறுதிக் கட்டமாக 7ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பீகாரில் 8 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட 57 தொகுதிகளில் 904 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குப்பதிவு இடங்கள் அதிகம் இருப்பதால், அங்குள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று இறுதியாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் தெற்கு 24 பர்கானாஸிஸ் பகுதியில் இரு பிரிவினர் இடையே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

தெற்கு 24 பர்கானாஸில் உள்ள 40, 41 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் EVM மற்றும் VVPAT ஆகிய இரண்டும் குளத்தில் வீசப்பட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு வங்க தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளதாவது, "இன்று காலை 6.40 மணியளவில் பெனிமாதவ்பூர் எஃப்.பி பள்ளிக்கு அருகில் உள்ள 19-ஜெய்நகர் (எஸ்சி) பகுதியின் செக்டார் அலுவலரின் ரிசர்வ் EVM இயந்திரம் மற்றும் அங்குள்ள பேப்பர்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

ஒரு EVM இயந்திரம், 2 VVPAT இயந்திரங்கள் குளத்திற்குள்ளே வீசப்பட்டுள்ளது என்றும், அந்த சமயம் செக்டார் போலீஸ் சற்று தூரத்தில் இருந்தார்கள் என்றும், துறை அதிகாரிகள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் உள்ள 6 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணிகள் தடையின்றி நடந்து வருகிறது. புதிய EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிக்கு வழங்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Lok Sabha Election 2024 Phase 7 Live: இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்களிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.