ETV Bharat / bharat

இலங்கை தமிழ் தேசியத் தலைவர் ரா.சம்பந்தன் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! - R sampanthan dies - R SAMPANTHAN DIES

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
TNA Leader R Sampanthan Meets PM Modi in 2019 File Photo (IANS Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 12:40 PM IST

ஐதராபாத்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் மூத்த எம்பியுமான ரா.சம்பந்தன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தலைநகர் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு தமிழீழ போர் நிறைவு பெற்ற பின் அங்குள்ள தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர் ரா.சம்பந்தன். இங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள், தமிழ் தேசியத் தலைவர்களை கைது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு ரா.சம்பந்தன் கடிதம் எழுதி இருந்தார்.

சிறுபான்மை சமூகத்தின் மீது அந்நாட்டு அரசு கட்டவிழ்த்துவிடும் அக்கிரமங்கள் மற்றும் கொடுமைகளை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும் என விரும்பியவரும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர் ரா.சம்பந்தன். மூத்த அரசியல் தலைவர் ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் ரா.சம்பந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரா.சம்பந்தனுடனான நினைவுகள் எப்போதும் நினைவுகூரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் அமைதி, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து பாடுபட்டவர் ரா. சம்பந்தன்" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரு. சம்பந்தன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாதவரும், மறுக்க முடியாதவருமாகிய, ஈழ தமிழ்ச் சமுகத்தின் மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவரும் ஆன, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) ஐயா, அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (30.6.2024) இரவு 11 மணியளவில் தனது 91 வது வயதில் கொழும்பில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

இலங்கை தமிழரின் அடுத்த தலைமுறை பாதுக்காப்பான வாழ்வியலை கட்டமைக்க, ஒரு சரியான அடித்தளத்தை அமைத்த தமிழின தலைவரான அவரது இழப்பு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்! என்ன காரணம்? - Parliament Opposition MPs Protest

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.