பஸ்டி : உத்தர பிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி நிகிதா. சம்பவத்தன்று நிகிதாவின் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் வீட்டுக் கதவை மூடாமல் சென்றதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் நிகிதாவும் அவரது தங்கை மட்டும் இருந்து உள்ளனர்.
அப்போது வீட்டினுள் திடீரென குரங்குகள் நுழைந்து உள்ளன. வீட்டு சமயலறையில் நுழைந்த குரங்குகள் ஏதாவது சாப்பிட்ட இருக்குமா என்ற தேடி உள்ளன. இதைக் கண்ட நிகிதா அச்சமடையவே, அதைக் கண்டு மிரண்டு போன குரங்குகள் சமயலறையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி நிகிதா மற்றும் அவரது தங்கையை தாக்க முயன்று உள்ளன.
குரங்குகள் தாக்க வருவதை கண்டு பயந்து போன நிகிதா அரிகில் அலெக்சா கருவி இருப்பதை கண்டு சாமர்த்தியமாக செயல்பட்டு உள்ளார். குரல்வழி மூலம் நாய்கள் குரைக்கும் சத்தத்தை எழுப்புமாறு நிகிதா கூறவே, அலெக்சா கருவியும் அந்த சத்தத்தை எழுப்பி உள்ளது. அலெக்சா கருவி எழுப்பிய சத்தத்தை உண்மையான நாய்களின் சத்தம் என அஞ்சிய குரங்குகள் வீட்டை விட்டு வெளியேறின.
சாமர்த்தியமாக செயல்பட்ட நிகிதா, நூலிழையில் குரங்குகள் தாக்குதலில் இருந்து தன்னையும் தனது தங்கையையும் பத்திரமாக மீட்டார். நிகிதாவின் துரித நடவடிக்கையால் தனது இரு குழந்தைகளும் உயிர் பிழைத்ததாக நிகிதாவின் தாய் ஷிப்ரா ஓஜா தெரிவித்து உள்ளார். குரங்குகள் நாய்களை கண்டு அஞ்சும் என்பதை உணர்ந்து தக்க நேரத்தில் அலெக்சாவிடம் நாய்கள் குரைப்பது போல் சத்தம் எழுப்புமாறு கூறியதாக நிகிதா தெரிவித்து உள்ளார்.
சாமர்த்தியமாக செயல்பட்டு தன்னையும் தனது தங்கையையும் மீட்ட நிகிதாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கு கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த 12 வயது சிறுவன், சிறுத்தை தாக்குதலில் இருந்து தன்னை மீட்டது போதாது, சிறுத்தையை அறையில் அடைத்து வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
நாசிக்கில் திருமண ஹாலில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று சிறுவன் இருந்த அறைக்குள் நுழைந்தது. இதை வீடியோ கேம் விளையாடியவாறே கண்ட சிறுவன் லாவகமாக சிறுத்தையை அறையில் வைத்து பூட்டி வைத்தான். பின்னர் அந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க : பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு கைது வாரண்ட் - 27 ஆண்டுகள் பழைய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! - Lalu Prasad Yadav