ETV Bharat / bharat

பேருந்து- லோடு டெம்போ மோதிய விபத்தில் 10 பேர் பலி; உ.பி.யில் துயரச் சம்பவம் - Uttar Pradesh bus Accident - UTTAR PRADESH BUS ACCIDENT

Uttar Pradesh bus Accident: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று பேருந்து மற்றும் லோடு ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பான கோப்புப்படம்
விபத்து தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 9:13 PM IST

ஹத்ராஸ் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் இன்று மாலை நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சன்பா கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மிட்டாய் புறவழிச்சாலை அருகே பேருந்தும், லோடு ஏற்றிக்கொண்டு வந்த டெம்போவும் மோதி விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். எச்.பி நிபுன் அகர்வால், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், சிஐ ஹிமான்சு மாத்தூர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்து குறித்து ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் நிகழ்ந்ததன் பின்ணனி குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்! பிரதமர் மோடி உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.