ETV Bharat / bharat

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா! என்ன காரணம்? - UPSC Chairman Manoj Soni Resign

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 11:09 AM IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்தார். 2029ஆம் ஆண்டு மே மாதம் வரை அவரது பதவிக் காலம் உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அவர் ராஜினாமா செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
UPSC Chairman Manoj Soni Resign (ANI)

டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு யுபிஎஸ்சியின் உறுப்பினரான சோனி, கடந்த 2023ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அந்த அமைப்பின் தலைவரானார்.

அவரது பதவிக்காலம் வரும் 2029ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் இருக்கும் முன்பே மனோஜ் சோனி ராஜினாமா கடிதம் அனுப்பியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகிவில்லை. அதேநேரம், மனோஜ் சோனியின் ராஜினாமா முடிவுக்கும், போலி சான்றிதழ்களை கொடுத்து மத்திய அரசு பணி பெறுவதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறப்படுகிறது.

குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் கிளையான அனூபம் மிஷனில், தொண்டு செய்வதில் அதிக நேரம் செலவிட விரும்புவதாக மனோஜ் சோனி தெரிவித்துள்ளார். மனோஜ் சோனியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது குறித்து எந்த தகவலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் மனோஜ் சோனி கடந்த 2005ஆம் ஆண்டில் 40 வயதாக இருந்த போது குஜராத் மாநிலம் வதோதராவின் புகழ்பெற்ற எம்எஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் நாட்டின் இளம் வயது துணை வேந்தர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு யுபிஎஸசி உறுப்பினராக அவர் அறிவிக்கப்பட்டார். இதனிடையே மனோஜ் சோனி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களில் மூன்று முறை துணை வேந்தராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி அமைப்பை பொறுத்தவரையில் தலைவர் மற்றும் அதிகபட்சமாக 10 பேர் கொண்ட உறுப்பினர் அமைப்பாக இயங்கி வருகிறது. தற்போது யுபிஎஸ்சி அமைப்பில் 7 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் தான் மனோஜ் சோனி பதவி விலகி இருப்பது கூடுதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கலாகும் 6 மசோதாக்கள்! என்னென்ன? - Parliament Monsoon Session

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.