ETV Bharat / bharat

7 நாட்களில் நாடு முழுவதும் சிஏஏ அமல் : மத்திய அமைச்சரின் பேச்சால் சர்ச்சை! சாத்தியமாகுமா? - சாந்தனு தாகூர்

நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்குள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 5:12 PM IST

Updated : Jan 30, 2024, 12:12 PM IST

காக்த்விப் : மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் அடுத்த காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சாந்தனு தாகூர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அயோத்தி ராமர் கோயில் கோலாகலாமாக திறக்கப்பட்டது, அடுத்த 7 நாட்களில் இந்திய குடியுரிமைச் சட்டம் (சிஏஏ) நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.

விரைவில் சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றும் மேற்கு வங்கம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதை அனைவரும் விரைவில் காண்பர் என்று கூறினார். வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை இருந்தால் குடிமகன் என்றும் அவர்கள் வாக்களிக்கலாம் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் கூறி உள்ளதாகவும், ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும் என்றும், குறிப்பாக மட்டுவா சமூக மற்றும் பாஜக ஆதரவாளர்களுக்கு மட்டுமே வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். பாஸ்போர்ட் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, மற்ற பிற ஆவணங்களை கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும்,

ஆனால் 1971 க்குப் பிறகு வந்தவர்களுக்கு குடியுரிமை தேவை, ஏனென்றால் ரோஹிங்கியாக்களைப் போல அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும் என்றார். எனவே, மத்திய அரசு சிஏஏவை அமல்படுத்தும், அதன் பிறகு, நம் நாட்டை விட்டு யாரையும் விரட்டும் அதிகாரம் எந்த அரசாங்கத்திற்கும் இருக்காது என்றும் அதனால் தான் சிஏஏ முக்கியமானது, அடுத்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.

முன்னதாக கடந்த ஆண்டு கொல்கத்தா வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் சிஏஏவை அமல்படுத்துவதில் பாஜக தலைமையிலான ஆட்சியை தடுக்க எவராலும் முடியாது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்! என்ன முடிவு?

Last Updated : Jan 30, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.