ETV Bharat / bharat

தொலைபேசி ஒட்டுக்கேட்ட விவகாரம்; தெலங்கானா முன்னாள் டிஜிபி ராதாகிஷண் ராவ் கைது! - telangana Phone Tapping Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 30, 2024, 3:32 PM IST

Telangana Phone Tapping Case: தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், தெலங்கானா முன்னாள் போலீஸ் அதிகாரி ராதாகிஷண் ராவ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

telangana Phone Tapping Case
telangana Phone Tapping Case

ஹைதராபாத்: தெலங்கானாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ராதாகிஷன் ராவை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, நேற்று பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில், ராதாகிஷன் ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர், தொலைபேசி வாயிலாக ஒட்டுக்கேட்டது மற்றும் ஆதாரங்களை அழித்ததை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், புலனாய்வுத் துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், ராதாகிஷன் ராவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தொடரும் என போலீசார் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தெலங்கானவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ஆட்சியின் போது, எதிர்கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசி அழைப்புகளை போலீஸ் அதிகாரிகள் ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அப்போது சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்த பிரனீத் ராவ் மற்றும் பலர் மீது கிரிமினல் நம்பிக்கை மீறல், சாட்சியங்கள் காணாமல் போனது ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில், IPC, PDPP சட்டம் மற்றும் IT சட்டம்-2000 இன் பிரிவுகளின் கீழ் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர், கடந்த மார்ச் 10ஆம் தேதி பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரனீத் ராவ், பல்வேறு மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி, முக்கியமான தரவுகளை தொலைபேசி வாயிலாக ஒட்டுக் கேட்டதற்காகவும், அதனை அழித்ததற்காகவும் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும், கடந்த மார்ச் 23ஆம் தேதி, பிரனீத் ராவுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதாக இரண்டு கூடுதல் புலனாய்வுத் துறை அதிகாரிகளான புஜங்கா ராவ் மற்றும் திருப்பட்டண்ணா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையில் ஒரு பகுதியாக, முன்னாள் சிறப்பு புலனாய்வுத் துறை தலைவர், டி பிரபாகர் ராவ், அப்போதைய துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிஷன் ராவ் மற்றும் தனியார் தெலுங்கு சேனலின் மூத்த நிர்வாகியை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும், அவர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தரப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தில், காவல் கண்காணிப்பாளர் ராதாகிஷன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் தொடரும் ஆம் ஆத்மி வேட்டை! டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்! - Kailash Gahlot

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.