மாலே : மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா. கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் லட்சத்தீவு சுற்றுப்பயணத்தை கடுமையாக விமர்சித்து இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று அமைச்சர்களில் ஒருவர் மரியம் ஷியனா. இந்நிலையில், மாலத்தீவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி குறித்து மரியம் ஷியுனா கடுமையான பதிவுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சித்து மரியும் ஷியுனா வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. இந்திய தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தை இழிவு படுத்தும் வகையில் மரியும் ஷியுனாவின் பதிவு பிரதபலித்தது. மேலும் அந்த பதிவில், மாலத்தீவு ஜனநாயக கட்சி மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாலத்தீவு மக்கள் அவர்களிடம் விழ விரும்பவில்லை என்று பதிவிட்டு அசோக சக்கரம் போன்ற படத்தைப் வெளியிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தனர். இந்நிலையில், அந்த பதிவை உடனடியாக நீக்கிய மரியம் ஷியுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரி உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "எனது சமீபத்திய பதிவின் கருத்தால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவின் எதிர்க்கட்சியான எம்டிபிக்கு நான் அளித்த பதிலில், பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை சார்ந்திருந்தது என எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். இந்தியாவுடனான உறவை மாலத்தீவு ஆழமாக மதிக்கிறது. எதிர்காலத்தில் நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பேன்" என்று பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க : முஸ்லிம் லீக் விவகாரம்: பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்! - Lok Sabha Election 2024