டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை தகுதி நீக்கம் செய்யவோ, அல்லது முதலமைச்சராக தொடரக் கூடாது என உத்தரவிடவோ முடியுமா என்பதில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் உள்ளதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மட்டுமின்றி மூன்று மாதத்திற்கும் மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Supreme Court grants interim bail to Delhi Chief Minister and AAP National Convener Arvind Kejriwal in the Delhi excise policy case.
— ANI (@ANI) July 12, 2024
The Apex Court refers his petition challenging his arrest by the Enforcement Directorate (ED) to a larger bench. pic.twitter.com/9s40JBWJhV
பிரதிநிதித்துவ சட்டத்தின் 19வது பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் நீதிமன்றத்திற்கு உள்ளதகாவும் அதன்படி வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைப்பதாகவும் நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது நடவடிக்கைக்கு அனுமதிக்க முடியாது என்றும் அதேநேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறினார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மே 17ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை குற்றவாளியாக இணைத்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுபான கொள்கை முறைகேட்டில் ஹவாலா மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் வழங்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் க்டந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மக்களைவை தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் மீண்டும் சரணடைந்தார்.
இதையும் படிங்க: பாலியல் சீண்டலால் சிஐஎஸ்எப் வீரரை அறைந்தாரா ஸ்பைஸ்ஜெட் பெண் ஊழியர்! என்ன நடந்தது? - Spicejet Employee Slap CISF