ETV Bharat / bharat

திரிபுராவில் 828 மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சி விளக்கம்! - tripura aids cases

author img

By ANI

Published : Jul 10, 2024, 6:27 PM IST

Tripura HIV case issue: திரிபுராவில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு குறித்து வெளியான தகவலுக்கு அம்மாநில அரசு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

எச்ஐவி பரிசோதனை தொடர்பான புகைப்படம்
எச்ஐவி பரிசோதனை (credit - ETV Bharat Tamil Nadu)

திரிபுரா: திரிபுரா மாநிலத்தில் 828 மாணவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அண்மையில் வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திரிபுராவில் அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் போதை ஊசி கலாச்சாரம் அதிகமாகி, அதன் மூலம் மாணவர்களுக்கு எய்ட்ஸ் பரவியதாகவும் சொல்லப்பட்டது.

எனவே, இது அண்மையில் கண்டறியப்பட்ட தகவலாக கசிந்து, சோஷியல் மீடியாவிலும், செய்திகளிலும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து திரிபுராவின் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், திரிபுராவில் 828 மாணவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டதும், அதில் 47 பேர் உயிரிழந்திருப்பது உண்மைதான். ஆனால், அது ஏப்ரல் 2007 முதல் மே 2024 வரையிலான புள்ளி விவரம் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டுள்ள 828 மாணவர்களும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதலின்படி இலவச ஆன்டி-ரெட்ரோவைரல் சிகிச்சையைப் பெறுகிறார்கள் எனவும் திரிபுரா அரசு கூறியுள்ளது. எய்ட்ஸ் புள்ளிவிவரம் குறித்து விளக்கம் அளித்துள்ள திரிபுரா அரசு, 2022-23ஆம் ஆண்டில் எச்.ஐ.வியால் 1,847 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 67 பேர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல, 2023 - 24ஆம் ஆண்டில் புதிதாக 1,790 பேருக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு மேட் இன் இந்தியா ஷுக்கள் - சர்வதேச அளவில் கவனம் பெறும் பிகார் தனியார் நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.