டிமா ஹசாவோ: அசாம் மாநிலத்தின் டிமா ஹசாவோ மாவட்டத்தின் உம்ராங்சோவில் பிரபல தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் இரண்டாவது லைனில் நேற்று வழக்கம்போல பணியாளர்கள் இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென ராட்சச கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயங்கள் உடன் ஹோஜாய் ஹம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஆனால், இது தொடர்பாக இதுவரை அந்நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும், பத்திரிகையாளர்களையும் டிமா ஹசாவோ போலீசார் தொழிற்சாலை வளாகத்தினுள் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில், இது குறித்து பேசிய உள்ளூர் மக்கள், “தனியார் நிறுவனத்தின் கீழ் டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் லைன் எண் 2 பணிகள் உம்ராங்சோவில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: “பாறைகளின் கீழே கேட்ட அந்த அலறல் சத்தம்..” வயநாடு நிலச்சரிவில் 16 உறவினர்களை பறிகொடுத்தவரின் ரணம் கலந்த பகிர்வு!