ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவர் மாவட்டத்தில் பச்சோலா அருகே வேன் மீது லாரி மோதியதில் ஒரே கிராமத்தச் சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக, அக்லேரா காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து, அக்லேரா காவல் நிலையப் பொறுப்பாளர் சந்தீப் பிஷ்னோய் கூறுகையில், “துங்கர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று (சனிக்கிழமை) வேனில் மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து இன்று அதிகாலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்பொழுது பச்சோலா அருகே வேன் வந்துக்கொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தலவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அக்லேரா காவல் நிலைய போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அக்லேராவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, விபத்து குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜாலாவர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடக்கும் இரண்டாவது கோர விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் - Meenakshi Thirukalyanam