புதுடெல்லி: தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி. சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரில் 1992 பேட்ச் ஐபிஎஸ் முடித்த பி. சீனிவாசன் நாட்டின் தீவிரவாத எதிர்ப்புப் படையான தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரலாக மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து நேற்று (செவ்வாய்க் கிழமை) நியமிக்கப்பட்டார்.
The Central Government appointed 1992 batch Indian Police Service (IPS) officer B Srinivasan as the new Director General of the National Security Guard (NSG). pic.twitter.com/QckFUtaxUz
— ANI (@ANI) August 27, 2024
பொறுப்பேற்ற நாள் முதல் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 வரை பி. சீனிவாசன் இந்த பதவியில் இருப்பார் என்றும் மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் புதிய இயக்குநர் ஜெனரலாக இருந்த நளின் பிரபாத் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 வரை அவரது ஒய்வு காலம் இருந்தது.
ஆனால், ஆகஸ்ட் 15 அன்று மத்திய அரசு அவரது பதவிக் காலத்தை குறைத்து, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைவராக நியமித்தது. இதனால், தேசிய பாதுகாப்புப் படையின் இயக்குனர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் தேசிய பாதுகாப்புப் படையின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது அந்த பதவிக்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி. சீனிவாசனை மத்திய அரசு நியமித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு; தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!