ETV Bharat / bharat

பாஜகவுக்கு 10, ஜன சேனாவுக்கு 21 - சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் திட்டம் என்ன?

Chandrababu Naidu: ஆந்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாஜக, ஜனசேனா கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 4:34 PM IST

அமராவதி : ஆந்திர பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் 10 இடங்களும், மக்களவை தேர்தலில் 6 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். அதேபோல் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு 2 மக்களவை இடங்களும், 21 சட்டப்பேரவை தொகுதிகளையும் சந்திரபாபு நாயுடு ஒதுக்கி உள்ளார்.

மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா சட்டப்பேரவைக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், தெலுங்கு தேசம், பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டு உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆந்திர பிரதேச சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடனான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அண்மையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா ஆகியோருடன் தொகுதி பங்கீடு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பாஜக 6 மக்களவை இடங்களிலும், 10 சட்டப் பேரவை தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும், ஜன சேனா கட்சி 2 மக்களவை மற்றும் 21 சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 17 மக்களவை தொகுதிகளிலும், 144 சட்டப் பேரவை இடங்களிலும் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. பாஜக மூத்த தலைவர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் மொத்த 25 மக்களவை இடங்களும், 175 சட்டப் பேரவை தொகுதிகளும் உள்ளன. முன்னதாக ஜன சேனா கட்சி 24 சட்டப்பேரவை தொகுதிகளை ஒதுக்க கோரிய நிலையில், 21 இடங்கள் கூட்டணியில் ஒதுக்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தெலுங்கு தேசம், பாஜக, ஜன சேனா ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து முதல் முறையாக 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய குடியுரிமை பெற தேவையான ஆவணங்கள் என்ன? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.