ETV Bharat / bharat

உ.பி. கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்! - Lok Sabha Election 2024

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 6:30 PM IST

கன்னோஜ் : நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின் போது சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் பேராசிரியர் ராம் கோபால், முன்னாள் கேபினட் அமைச்சர் உஷா வர்மா, அமிதாப் பாஜ்பே உள்ளிடோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அகிலேஷ் யாதவ், வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டும் இடமாக கன்னோஜ் அமையும் என்று தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ் இரும்பு சூடாக இருக்கும் போது தான் சுத்தியலை அடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

பாஜக தனது தொழிலதிபர் நண்பரின் நலனுக்காக நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை செய்து வருவதாகவும், கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவதாக தான் அறிவித்தது பல்வேறு பாஜக தலைவர்களை ஆட்டம் காணச் செய்து உள்ளதாவும் அகிலேஷ் யாதவ் கூறினார். ஜிஎஸ்டி வரியை விதித்து, பாஜக வரி ஏய்ப்புக்கு வழி காட்டியதாகவும் தொழிலதிபர்களால் பாஜக ஆதாயம் அடைந்துள்ளது என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நாடு முழுவதும் உள்ள வெறுப்பு அரசியல் வீழ்த்தப்படும் என்றும் அவர் கூறினார். உலகின் சிறந்த சாலைகள் சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது என்றும் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதையும் படிங்க : பாட்னாவில் உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து! 6 பேர் பலி - 20 படுகாயம்! - Patna Hotel Fire

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.