ETV Bharat / bharat

ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!

அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்க காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Jan 23, 2024, 11:00 AM IST

Updated : Jan 23, 2024, 8:13 PM IST

அயோத்தி : உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நேற்று (ஜன. 22) வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். முக்கிய அரசியல் தலைவர்கள், பல்துறை கலைஞர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, இன்று (ஜன. 23) காலை முதலே கோயிலில் வைக்கப்பட்டு உள்ள குழந்தை ராமர் சிலை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு உள்ளனர். அதிகாலை முதலே கோயில் வாசல் பகுதியில் திரண்ட மக்கள் பூஜைக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

தொடர்ந்து ராமருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலினுள் செல்ல முண்டியடித்துக் கொண்டனர். இதனால் கோயில் வளாகத்தில் கடும் ஜனநெருக்கடி ஏற்பட்டது. நாள்தோறும்ம் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் பிராண் பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் குவிந்து இருந்த பக்தர்கள் இன்று காலை கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்கத் திரண்டனர். காலை 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கு ஆயத்தமாகினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் திணறினர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்குள் செல்லக் கூடினர். அவர்களை சீர்படுத்தி கோயிலுக்குள் அனுமதிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி காவலர்களுக்கு சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. அயோத்தி கோயிலில் இன்று காலை குவிந்த பக்தர்கள் கூட்டம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

Last Updated : Jan 23, 2024, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.