ETV Bharat / bharat

"ஹரியானா போல கோட்டை விட்டு விடாதீர்கள்"-மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அறிவுறுத்தல் - RAHUL GANDHI

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலைப் போல கோட்டை விட்டு விடாமல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் தலைவர்களுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி (image credits-Etv Bharat)
author img

By Amit Agnihotri

Published : Oct 15, 2024, 5:08 PM IST

புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத்தேர்தலை ஒற்றுமையாக நின்று எதிர்கொள்ள வேண்டும் என்றும், கூட்டணி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்த வேண்டாம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து 14ஆம் தேதி அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளுடன் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில் ராகுல் பேசிய கருத்துகள் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய தலைவர்கள்,"ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதலமைச்சர் ஆவது என பூபேந்தர் சிங் ஹூடா, குமாரி செலஜா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரிடேயே போட்டியிருந்தது. இதனால் காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடாமல் தனித்தனியே செயல்பட்டதால் காங்கிரஸ் தோற்றது. எனவே ஹரியானா போல ஒருவருக்கு ஒருவர் போட்டி போடாமல் மகாராஷ்டிராவில் ஒருங்கிணைந்து வெற்றி பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்," என்று கூறினர்.

ஈடிவி பாரத்திடம் கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளருமான பிஎம் சந்தீப்,"பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எப்போதுமே ராகுல் காந்தி அறிவுறுத்தி வருகிறார். மகாராஷ்டிராவை பொறுத்தவரை தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை சட்டவிரோதமாக பாஜக பறித்து விட்டது. எனவே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். மாநிலத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். முதலமைச்சர் யார் என்பது தேர்தல் முடிவுக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்,"என்றார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் எப்போது? தேதிகளை அறிவித்த ஆணையம்!

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்த முக்கிய முடிவுகளை ராகுல் காந்திதான் மேற்கொண்டார். தவிர இப்போது மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல்களிலும் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்."14ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து மீண்டும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது காங்கிரஸ் உத்தரவாதம் என்ற முக்கியமான வாக்குறுதி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார்," என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஈடிவி பாரத்திடம் குறிப்பிட்டார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே, மூத்த தலைவர் பாலாசாகேப் தோரட் இடையே மோதல் இருந்து வந்தது. இதையடுத்து தேசிய தலைவர் மலிகார்ஜூன கார்கேவிடம் இது குறித்து ஆலோசனை மேற்கொண்ட ராகுல், மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளராக கடந்த 2023ஆம் ஆண்டு கேரளாவின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலாவை நியமித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே முதலமைச்சராக இருப்பார் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியிருந்தார். இது உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியை அதிருப்திக்கு உள்ளாக்கியது.

அதே போல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஆட்சி அமைப்பதில் முக்கியபங்கு வகிப்பார். 2019ஆம் ஆண்டு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை ஒன்றிணைத்து கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு சரத்பவாரையே சேரும். அவரது முயற்சியின் வாயிலாக உருவான மகா விகாஸ் அகாதி கூட்டணி 2019ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. பின்னர், சிவசேனா அதிருப்தியாளர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் வெளியேறியதால் ஆட்சி கவிழ்ந்தது. அவர் பாஜக ஆதரவுடன் 2022ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.