ETV Bharat / bharat

நாளை மறுநாள் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Narednra Modi Sworn - NAREDNRA MODI SWORN

President Droupadi Murmu appoints Narendra Modi as PM designate: பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்ற உறுப்பினர்களுக்கு ஜூன் 9ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளதாக ராஷ்டிரபதி பவன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Narendra Modi
Narendra Modi (Photo Credit - PTI)
author img

By PTI

Published : Jun 7, 2024, 10:38 PM IST

டெல்லி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கடித்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று வழங்கினார். இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்படி, ராஷ்டிரபதி பவனின் அறிக்கையின் படி, நடந்து முடிந்து 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமாக 543 மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து நிலையில், ஆட்சி அமைக்க 272 மக்களவை உறுப்பினர்கள் தேவை. அதில் பாஜக 240 இடங்களில் தனித்து வென்றுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாஜக 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, கூட்டணியுடன் ஆட்சி அமைப்பதற்கான தேவையான இடங்கள் உள்ளதால், இந்திய அரசியலமைப்பு 75 (1) பிரிவின் கீழ் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் மற்ற உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்டிரபதி பவன் முன்பு நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பிற்காக குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். 2047 சுதந்திரம் அடைந்த பின் 100 ஆண்டுகளுக்கான கனவுகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான தேர்தலாக இந்த 18வது மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது என தெரிவித்தார். 18வது மக்களவைத் தேர்தல் புதிய உற்சாகத்தையும், இளைஞர்களுக்கான செயல்திறனையும் கொடுத்துள்ளது. மேலும், மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.

மேலும், நரேந்திர மோடி பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேச நலனே முதன்மையானது.. தமிழக மக்களுக்கு நன்றி.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? - Nda Government Formation Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.