டெல்லி: உலக பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளனர். மேலும், இருவரும் சில மணி நேரம் உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரின் இந்த சந்திப்பின்போது சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், பெண்கள் முன்னேற்றம், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த நினைவுப் பரிசில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தின் கடல் பகுதியில் கிடைக்கும் முத்து, களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை பொம்மைகள், நீலகிரி மற்றும் டார்ஜிலிங் பகுதியில் கிடைக்கும் டீத்தூள் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ்க்கு, தமிழ்நாட்டில் கிடைக்கக் கூடிய மூன்று பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்? - படிப்படியாக குறைக்கப்படுகிறதா ராணுவம்? என்ன திட்டம்? - AFSPA Removal From Kashmir