டெல்லி: டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி அரசியல் சாசன புத்தகத்தை கையில் எடுத்து நெற்றியில் வைத்து வணங்கினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி நிதின் கட்கரி நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் மற்றும் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் பதவிகளில் பிரதமர் நரேந்திர மோடியை முன்மொழிந்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து அதனை ஆதரித்து பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, "நரேந்திர மோடிக்கு தொலைக்கு பார்வையும், வைராக்கியமும் உள்ளது. அவர் தனது அனைத்து கொள்கைகளையும் உண்மையாகவும் மனப்பான்மையுடன் செயல்படுத்துகிறார். அதனால் இன்று இந்தியாவுக்கு சரியான தலைவர் நரேந்திர மோடி தான்" என புகழாரம் சூட்டினார்.
பின்னர், பேசிய ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், "பீகாரில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்றும் நாம் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயங்களை செய்ய காத்திருப்பதாகவும் பிரதமர் மோடியோடு இணைந்து செயல்படுவோம்" என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க: உ.பியில் வெற்றி கண்ட சமூகப் பின்னணி.. சமாஜ்வாதியின் Pda பலித்ததா? பாஜக இறங்குமுகம் கண்டது ஏன்?